தேசியக் கொடியை அவமதித்த மெஹபூபா முப்தி மீது பாய்கிறது சட்ட நடவடிக்கை.!

தேசியக் கொடியை அவமதித்த மெஹபூபா முப்தி மீது பாய்கிறது சட்ட நடவடிக்கை.!

Update: 2020-10-25 10:19 GMT

"எங்களின் கொடி (370வது பிரிவு நீக்கப்படுவதற்கு முன் இருந்த ஜம்மு காஷ்மீர் கொடி) மீட்கப்பட்டால் தான் இங்கு தேசியக்கொடி ஏற்றப்படும். அதன் பின் தான் தேசியக் கொடியைக் கையில் ஏந்துவேன்" என்று ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் மெகபூபா முப்தியைக் கைது செய்யுமாறு பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.


காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி "எங்கள் கொடியை ஏந்தும் வரை நான் இந்தியயக் கொடியை ஏந்த மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய அரசுக்கு இல்லை என்றும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் கீழ்தான் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். காஷ்மீருக்கு தனி கொடியும் அரசியல் சாசனமும் இருந்ததால்தான் மற்ற பகுதிகளுடன் இணக்கமாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரின் இந்த கருத்துக்கு அம்மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திரா ரெய்னா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தின் பா.ஜ.க தலைவர் ரவீந்திர ரெய்னா கூறுகையில் தேசத்திற்கு விரோதமான கருத்துக்களை கூறும் மெகபூபா முப்தியை தேசத் துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மாநில ஆளுநரை கேட்டுக்கொண்டார்.

"இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே கொடி தான். அதேபோல் ஜம்மு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த மாநிலம் தான். அங்கு ஒரு கோடி தான் இருக்க வேண்டும். அது தேசிய கொடியாக தான் இருக்கவேண்டும்" என்று அவர் கூறினார். நாட்டிலுள்ள ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை மெகபூபா முப்தி குலைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அவர் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர் கொள்வார் என்றும் தவறாக எதுவும் நடந்தால் அதற்கான விளைவுகளை முப்தி சந்திப்பார் என்றும் தெரிவித்தார் .

Similar News