உ பி: மிஷன் சக்தி கீழ் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களின் புகார்களுக்கு உதவி மையங்கள்.!

உ பி: மிஷன் சக்தி கீழ் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களின் புகார்களுக்கு உதவி மையங்கள்.!

Update: 2020-10-25 16:22 GMT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதனை மேம்படுத்தவும் 'மிஷன் சக்தி' திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யப் பெண் காவலர்களுக்கென கண்ணாடி அறை ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மாநிலத்தில் உள்ள 1,535 காவல் நிலையங்களிலும் பெண்களுக்கு உதவும் அறைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அறைகளுக்கும் CCTV கேமெராக்களும், கணினிகளும் அமைக்கப்படும் என்று முதல்வர் உறுதி செய்தார். பெண்கள் அளிக்கும் புகார்களைப் பதிவு செய்ய அதற்குத் தேவையான பொருட்கள் வழங்கப்படும். உதவி எண்கள் 1090, 181, 112, 1076, 1098 மற்றும் 102 போன்றவை ரகசிய அறைகளிலும் மற்றும் பெண்களுக்கு உதவும் வகையில் உதவி மையங்களில் காண்பிக்கப்படும்.

மிஷன் சக்தியில் தொடர்புடைய மற்ற அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதன்மை செயலாளரும் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் இருக்கும் மற்ற அதிகாரிகளும் கண்காணிப்பர் என்று முதல்வர் யோகி தெரிவித்தார். இந்த திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் பல்வேறு கல்வி நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களுக்கான செயல்பாடுகள் குறித்து ஆக்ரா, மீரட், வாரணாசி, லக்னோ மற்றும் கௌதம் புத்தா நகரில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள பெண் காவலர்களிடமும், உதவி மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகாரிகளிடமும் மற்றும் பெண் ஆசிரியர்களிடமும் முதலமைச்சர் கலந்துரை ஆடினார்.

Similar News