இந்தியாவில் முதல்முறையாக ஹைதராபாத் ‌விமான நிலையத்தில் இ-போர்டிங் நடைமுறை.!

இந்தியாவில் முதல்முறையாக ஹைதராபாத் ‌விமான நிலையத்தில் இ-போர்டிங் நடைமுறை.!

Update: 2020-10-28 11:26 GMT

இந்தியாவில் முதன்முதலாக ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இ - போர்டிங் வசதி சர்வதேச விமானங்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் காத்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது

இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளுக்கு இ-போர்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக ஹைதராபாதிற்கு வரும் சர்வதேச விமான பயணிகள் காகிதம் அல்லாமல் அனைத்து கோப்புகளையும் மிண்ணனு சாதனங்கள் மூலம் காண்பித்து பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் முதன்முறையாக உள்ளூர் பயணத்துக்கு இ - போர்டிங் வசதியை அறிமுகப்படுத்திய விமான நிலையமாக இருந்து வந்த ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம், தற்போது சர்வதேச விமான பயணங்களுக்கும் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த சேவையில் முதல் முறையாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் 6E 1405 விமானத்தில் ஹைதராபாத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் போது இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து இயங்கும் அனைத்து சர்வதேச விமானங்களிலும், இந்த சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் பணிக்கர் கூறுகையில், "கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் பயணிகள் பயணத்தை தானியக்கமாக்குவது மிகவும் இனிமையான விமான அனுபவத்தை வழங்குகிறது. வெற்றிகரமாக சோதனை செய்து அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களும் பெற்ற பிறகே சர்வதேச பயணங்களுக்கு இ-போர்டிங் நடைமுறையைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளோம்." என்று தெரிவித்தார். மேலும் இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் ஒத்துழைப்பால் இந்த முயற்சி சாதாதியமானதாகக் கூறிய அவர், பயணிகள் பழைய நடைமுறையையோ அல்லது புதிய இ-போர்டிங் முறையையோ தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

Similar News