மிலாடி நபி தினத்தில் 'அமைதி மற்றும் சகோதரத்துவம்' பெருகட்டும்- வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்.!

மிலாடி நபி தினத்தில் 'அமைதி மற்றும் சகோதரத்துவம்' பெருகட்டும்- வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்.!

Update: 2020-10-30 17:56 GMT

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாடி நபி தினத்திற்கு வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முதலியோர் தங்கள் வாழ்த்துக்களை மக்களுக்குத் தெரிவித்துள்ளனர். உலகில் இருக்கும் முஸ்லீம் மக்கள் அனைவரும் இந்த நாளை செழிப்பின் தினமாகக் கொண்டாடுகின்றனர். 

இந்த தினத்தில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள் ட்விட் மூலம் மிலாடி நபி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

"முகமது நபியின் பிறந்தநாளான மிலாடி நபி தினத்தில், நாட்டில் இருக்கும் சக மக்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன், குறிப்பாக இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருக்கும் எங்களின் முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர் கற்றுக்கொடுத்ததைப் பின்பற்றி நாட்டின் அமைதிக்காகச் செயல்படுவோம்," என்று ஜனாதிபதி கோவிந்த் ட்விட் செய்திருந்தார்.

"முகமது நபியை நினைவு கூறும் இந்த மிலாடி நபி தின வாழ்த்துகள். அவர் உலகம் முழுவதும் சகோதரத்துவம், சகிப்புத்தன்மை போன்றவற்றிற்கு வழிகாட்டியுள்ளார். இந்த புனித தினத்தில் அனைவரும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்," என்று துணை ஜனாதிபதி ட்விட் செய்திருந்தார்.


"மிலாடி நபி நல்வாழ்த்துக்கள். இந்நாளில் அனைத்து இடங்களிலும் சகோதரத்துவமும், சகிப்புத்தன்மையும் மேம்படட்டும். அனைத்து மக்களும் மகிழ்ச்சி உடனும் ஆனந்தத்துடனும் இருக்கட்டும்," என்று பிரதமர் மோடி ட்விட் செய்திருந்தார்.


"மிலாடி நபிக்குத் தினத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்நாளில் சகோதரத்துவமும் கருணையும் அனைவரிடமும் பெருகட்டும்," என்று காங்கிரஸ் தலைவர் ட்விட் செய்திருந்தார். "மிலாடி நபி தின நல்வாழ்த்துக்கள்," என்று மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் நக்வி ட்விட் செய்துள்ளார்.

"மிலாடி நபி தின வாழ்த்துக்கள். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சகோதரத்துவம், செழிப்பு, அமைதியைக் கொண்டுவரட்டும்," என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Similar News