ஆசிய கண்டத்தில் மிகவும் தூய்மையான ஆறு: இந்தியாவில் தான் இருக்கிறதாம் !
ஆசிய கண்டத்திலேயே மிகவும் தூய்மையாக ஆறாக அறியப்படுகிறது, இந்தியாவில் உள்ள இந்த ஆறு.
நாம் இருக்கின்ற இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும், பள்ளிப் பருவத்தில் இருந்து கற்பிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இருந்தாலும் நீர் நிலையங்களில் இத்தகைய தூய்மையை யாரும் கடைப்பிடிப்பதில்லை. உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் வீட்டில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பெயரில் ஆறுகளில் கொட்டுவதை பார்க்கலாம். இப்படியிருக்கையில், ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான ஆறு எங்குள்ளது? என்று ஆய்வு நடத்தப்பட்ட போது, பெரும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி இந்தியர்களுக்கு தற்பொழுது கிடைத்துள்ளது. ஆம் அத்தகைய தூய்மையான ஆறு இந்தியாவில் தான் இருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் பாய்ந்து வரும் நதி உம்காட். இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது மவுலினாங் என்னும் கிராமம் அமைந்துள்ளது. எனவே இந்த கிராமத்தில் உள்ள ஆறுதல் மிகவும் தூய்மையான ஆறாக அறியப்படுகிறது. மேலும் இந்த கிராமம் தான் ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமமாக இருந்து வருகிறது. இந்த கிராமம் 100% கல்வியறிவு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த உம்காட் நதிதான் ஆசியாவிலேயே மிகவும் தூய்மையான நதி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நதியின் 10 அடி ஆழத்தில் உள்ள பாறைகள், ஓடும் மீன்கள் என அனைத்தும் தெளிவாகத் தெரியும். நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை, இந்த நதியை பார்க்க உகந்த காலம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Image courtesy:India Today