உயிரிழந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் மின்மயானத்துக்கு எடுத்துசெல்லும் கல்லூரி மாணவி.!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைன் வாயிலாக படித்து வருகிறார். கல்லூரி நேரம் போக மீதி நேரத்தை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆம்புலன்ஸில் இருந்து மின் மயானங்களுக்கு எடுத்து செல்லும் பணியை செய்து வருகிறார்.

Update: 2021-06-16 11:50 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் எடுத்து செல்லும் பணியை 20 வயது கல்லூரி மாணவி செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைன் வாயிலாக படித்து வருகிறார். கல்லூரி நேரம் போக மீதி நேரத்தை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆம்புலன்ஸில் இருந்து மின் மயானங்களுக்கு எடுத்து செல்லும் பணியை செய்து வருகிறார்.


 



அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் இறப்பவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் ஏற்றுவது மட்டுமின்றி, அவரே ஆம்புலன்ஸை மின்மயானங்களுக்கு ஓட்டி செல்கிறார். இது பற்றி மாணவி பிரியா கூறியதாவது: எனது தந்தை இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். நான் கடந்த 15 நாட்களாக இப்பணியை சேவையாக நினைத்து செய்து வருகிறேன். எனக்கு பெற்றோர்களின் ஆதரவும் இருப்பதால் இந்த சேவையை எளிதாக செய்ய முடிகிறது.

இதுவரை 65 பேரின் சடலங்களை மின் மயானங்களில் எடுத்து சென்று ஒப்படைத்துள்ளேன். கல்லூரி வகுப்பு நேரம் போக மீதி நேரத்தை இந்த கொரோனா காலத்தில் நாட்டு மக்களின் துன்பங்களில் பங்கெடுப்பதற்காக என்னால் முடிந்த இந்த பணியை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News