உடனடி நடவடிக்கைகளை எடுத்த பிரதமர்! நிர்மலா சீத்தாராமன் பெருமிதம்!

உடனடி நடவடிக்கைகளை எடுத்த பிரதமர்! நிர்மலா சீத்தாராமன் பெருமிதம்!

Update: 2020-12-18 18:00 GMT

பொருளாதாரத்தை ஆதரிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றாலும், கொரோனா தொற்றுநோயால் உருவாகியுள்ள நெருக்கடியை சமாளிக்க எந்தவிதமான தலையீடும் போதுமானதாக இருக்காது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்திய வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், 2020’ஆம் ஆண்டின் முற்பகுதியில் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கான  அறிகுறிகள் காணப்பட்டது. என்றாலும் அது தொற்றுநோய் பரவல் காரணமாக மோசமடைந்தது என்று கூறினார்.

பல வர்த்தக அமைப்புகளை கலந்தாலோசிப்பதன் மூலம் அரசாங்கம் இதுவரை நல்ல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தத் துறையிலிருந்து நாங்கள் சொல்லும் கருத்துக்களைப் பெற்று சரியான நடவடிக்கைகள் எடுத்தார். 

உதாரணமாக, கரிப் கல்யாண் யோஜனா, இலவச சமையல் எரிவாயு மற்றும் நேரடி நன்மை பரிமாற்ற திட்டங்கள் ஆகியவை நரேந்திர மோடி அரசாங்கத்தால் உடனடியாக அறிவிக்கப்பட்டன என நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஆத்மநிர்பர் பாரத் தொடர்பாக மூன்று வெவ்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேலும் ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து, பல்வேறு துறைகளுக்காக சில திட்டங்கள் தேவை அடிப்படையில் இயக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

“எந்தவொரு குறிப்பிட்ட துறைக்கும் நாங்கள் வாய்ப்புகளை கட்டுப்படுத்தவில்லை. தொழில்துறையை வேகமெடுக்க வைக்க இது சரியான தேவை” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

அரசாங்கம் விவசாயத் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய தொழிலாளர் சட்டங்களை நெகிழ்வுத்தன்மைக்கு கொண்டு வந்துள்ளது. 
அடுத்த பட்ஜெட்டில், மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பொதுச் செலவுகள் தொடர்ந்து வைக்கப்படும் என்று அவர் கூறினார்.

பொருளாதார மீட்சி குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்திய நிர்மலா சீதாராமன், “புத்துயிர் பெறுவதற்கான தெளிவான அறிகுறிகளை நாங்கள் காண்கிறோம். ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பட்ஜெட் தயாரிக்கும் போது இந்த அசாதாரண நேரத்தில் தொழில்துறையிலிருந்து உள்ளீடுகள் தேவை.” எனத் தெரிவித்தார்.

Similar News