மதுபோதையில் குருத்வாராவில் நுழைந்த பஞ்சாப் முதல்வர் - துணிந்து அடிக்கும் பா.ஜ.க!

Update: 2022-04-18 11:14 GMT

பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் குடிபோதையில் குருத்வாராவில் நுழைந்ததாக, ஷிரோமணி குருத்வாரா பர்பந்த கமிட்டி குற்றம்சாட்டியிருந்தது. சீக்கிய மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை பைசாகி. கடந்த ஏபரல் 14ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது முதலமைச்சர் பகவத் மான் குடி போதையில் வந்த சம்பவம் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பஞ்சாப் முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அந்த கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

பாஜக இளைஞரணி தேசிய செயலாளர் Tajinder Pal Singh Bagga தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், குடிபோதையில் குருத்வாரா தம்தாமா சாஹிப்புக்குள் நுழைந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்ததாக' குறிப்பிட்டுள்ளார்.

தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே முதல்வராகும் முன்பே பகவத் மான் பல இடங்களில் குடுபோதையில் சிக்கி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகினார். முதலமைச்சரான பிறகு அவர் மீது முதல் முறையாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News