இனி உள்ளூர் அரசியல் தலையீட்டுக்கு வேலையே இல்லை - கூட்டுறவு வங்கிகளை அடுத்து லெவலுக்கு கொண்டு செல்லும் மத்திய அரசு!

கூட்டுறவு வங்கிகளை அடுத்து லெவலுக்கு கொண்டு செல்லும் மத்திய அரசு!

Update: 2021-10-31 01:00 GMT

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர்,  அனைத்து முதன்மை வேளாண் கடன் சங்கங்களையும் கணினிமயமாக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கணினிமயமாக்கலின் காரணமாக உறுப்பினர்கள் எந்த மோசடிகளையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை.

வேளாண் கடன் சங்கங்களை மாவட்ட வங்கிகளுடனும், மாவட்ட வங்கிகளை மாநில கூட்டுறவு வங்கிகளுடனும், மாநில கூட்டுறவு வங்கிகளை நபார்டுடனும் நேரடியாக இணைக்க கணினிமயமாக்கல் உதவுகிறது மற்றும் விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களும் சங்கங்கள் மூலம் நேரடியாக விவசாயிகளை சென்றடைகிறது. நாட்டிலுள்ள மிகச் சில மாநிலங்களே இதுவரை இந்தப் பணியைச் செய்ய முடிந்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்திய அரசு ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்து வருவதாகவும், அதன் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து வேளாண் கடன் சங்கங்ககளையும் கணினிமயமாக்கவும், மாவட்ட வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், நபார்டுடன் அவற்றை இணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

கூட்டுறவு இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்த கூட்டுறவு பயிற்சி மையங்கள் மிகவும் முக்கியமானவை. கூட்டுறவு இயக்கம் முந்தைய அரசுகளால் பலவீனப்படுத்தப்பட்டது, ஆனால், புதிய கூட்டுறவு அமைச்சகத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு உருவாக்கி, கூட்டுறவு நிறுவனங்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் நலனுக்காக பெரும் பணியைச் செய்துள்ளார் என்று அமித் ஷா கூறினார்.

எங்கள் கட்சியால் மட்டுமே ஏழைகளுக்கு நலன்களை வழங்க முடியும், மோடியின் தலைமையில் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியும் என்று அமித் ஷா மேலும் கூறினார்.





Tags:    

Similar News