பாகிஸ்தானுக்கு பகடைக்காய்களாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு - இந்தியா கடும் கண்டனம்.!

பாகிஸ்தானுக்கு பகடைக்காய்களாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு - இந்தியா கடும் கண்டனம்.!

Update: 2020-11-30 18:05 GMT

நைஜரில் நடந்த ஒரு கூட்டத்தில் குழு ஏற்றுக்கொண்ட தீர்மானங்களில் ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான மற்றும் தேவையற்ற குறிப்புகளை வழங்கியதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை (OIC) இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் நாட்டின் ஒருங்கிணைந்த மற்றும் தவிர்க்கமுடியாத பகுதி என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற குறிப்புகளைத் தவிர்ப்பதற்கு OIC அமைப்புக்கு இந்தியா அறிவுறுத்தியதுடன், ஒரு குறிப்பிட்ட நாட்டால் தன்னைப் பயன்படுத்திக் கொள்ள குழு தொடர்ந்து அனுமதிப்பது வருந்தத்தக்கது என்றும் தெரிவித்துள்ளது. OICயின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலின்(CFM)  47வது அமர்வு நவம்பர் 27-29 தேதிகளில் நைஜரில் நியாமியில் நடைபெற்ற கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் தொடர்பான அதன் கொள்கைகள் குறித்து இந்தியாவைப் பற்றி ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தது.

"நியாமியில் 47 வது  CFM  அமர்வில் OIC  ஏற்றுக்கொண்ட தீர்மானங்களில் இந்தியா குறித்த உண்மைக்கு புறம்பான, தவறான மற்றும் தேவையற்ற குறிப்புகளை வெளிப்படுத்தியதை நாங்கள் கடுமையாகவும் திட்டவட்டமாகவும் நிராகரிக்கிறோம்" என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் தவிர்க்கமுடியாத பகுதியாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உட்பட இந்தியாவின் உள் விஷயங்களில் ஓஐசி’க்கு எந்தவிதமான இடமும் இல்லை என்பதை நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்" என்று அது மேலும் கூறியுள்ளது. OIC  என்பது முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளின் குழுவாகும்.

"மத சகிப்புத்தன்மை, தீவிரவாதம் மற்றும் சிறுபான்மையினரை துன்புறுத்துவது போன்றவற்றில் அருவருப்பான பதிவுகளைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட நாட்டால் OIC தன்னை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிப்பது வருந்தத்தக்கது" என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் கூறியது.
எதிர்காலத்தில் இதுபோன்ற குறிப்புகளைத் தவிர்ப்பதற்கு OICக்கு இந்தியா கடுமையாக அறிவுறுத்துகிறதுுு.  

Similar News