குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடக்க மோசமான வானிலையே காரணம்!

இந்த விபத்து இந்திய ராணுவத்தினர் மத்தியில் மட்டுமின்றி குடிமக்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான விசாரணை அமைக்கப்பட்டது.

Update: 2022-01-02 11:09 GMT

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பலத்த தீக்காயத்துடன் விமானி வருண் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து இந்திய ராணுவத்தினர் மத்தியில் மட்டுமின்றி குடிமக்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான விசாரணை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு மிகவும் மோசமான வானிலையே காரணம் என தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டரில் எவ்வித தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்று ஏர் மார்ஷல் மான்வேந்திரா சிங் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. விரைவில் இது தொடர்பான அறிக்கை முழுமையாக சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Source,Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News