உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா உறுதி.!
சமீபத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் பின்னர் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர் உத்தரபிரதேசம் புறப்பட்டு சென்றார். அங்கு சென்று தனது அலுவலக பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாரிகள் மூலமாக தொற்று பரவியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் அதிகாரிகள் என்னுடன் தொடர்பில் இருந்ததால், என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.
தற்போது எனது பணிகளை ஆன்லைன் வாயிலாக துவக்க உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.