கேரளாவை மிரட்டுகிறதா கொரோனா? 6 பேர் கொண்ட மத்திய குழு முடிவு என்ன?

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கேரளாவில் 2 நாள்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-07-30 12:58 GMT

கொரோனா 2வது அலை இந்தியாவில் கோர தாண்டவமாடியது. பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்தும், குறைந்தும் வரும் சூழ்நிலையில் தற்போது மத்திய குழு சார்பில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா கேரளாவில் அதிகமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்படுத்தியது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பாதிப்பிலிருந்து மீண்டு வருவது பல மாநிலங்களுக்கு கடும் சவாலாக இருந்தது. இதன் காரணமாக மத்திய அரசின் சார்பாக 6 பேர் கொண்ட குழு கேரளாவில் புதிய ஆய்வு மேற்கொண்டது. 


இந்த குழு நேற்று தனது ஆய்வைத் தொடங்கியது குறிப்பாக கொரோனா தொற்று குறையாமல் இருப்பதற்கு காரணம் என்ன? என்றும், மேலும் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா? என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது. எனவே இன்று இந்த குழு தனது முடிவை அறிவித்துள்ளது  குறிப்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும். இதன் மூலம்தான், நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவர் கட்டுப்படுத்துவதே தவிர்க்க முடியும். ஏனென்றால் சமூக தொற்று பரவல் காரணமாக தான், கேரளாவில் இன்னும் நோய்தொற்று அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுப்பதற்கு ஒரே வழி ஊரடங்கு மட்டும் தான் என்றும் கூறியுள்ளது. 


தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவிலிருந்து தற்போது 1750 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் அண்டைய மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. அங்கு தினசரி பாதிப்பு 17ஆயிரமாக உள்ளது. இதனால் அங்கு பொது முடக்கத்தில் பெரியளவில் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. வார இறுதி நாள்களில்முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. 

Inputs: https://www.ndtv.com/india-news/coronavirus-complete-lockdown-in-kerala-on-saturday-sunday-amid-rising-cases-of-covid-19-2497435 

Image courtesy: NDTV news 


Tags:    

Similar News