தடுப்பூசி தேவை அதிகரிப்பு: வெளிநாடுகளில் உற்பத்தியை தொடங்கும் சீரம் நிறுவனம்.!

ஜூலை மாதத்திற்குள் 100 மில்லியன் அளவுக்கு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Update: 2021-05-01 05:26 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசிக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் கோவீஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம் வெளிநாடுகளிலும் உற்பத்தியை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.




 


இது குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா, செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளிலும் தடுப்பூசியை உற்பத்தி செய்வது குறித்து இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும்.


 



ஜூலை மாதத்திற்குள் 100 மில்லியன் அளவுக்கு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே வரும் காலங்களில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க வாய்ப்புள்ளது. 

Similar News