ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாடு இந்தியா: G20 செயல்பாட்டுக் குழு கூட்டத்தில் தீர்மானம்!

ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் செயல்பாட்டை வலியுறுத்தும் வகையில் G20 செயல்பாட்டுக் குழு கூட்டம்.

Update: 2023-03-01 01:43 GMT

ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் செயல்படும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக, ஹரியானாவின் குருகிராமில் வரும் மார்ச் 1ந் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற இருக்கும் G20 ஊழலுக்கு எதிரான முதல் செயல்பாட்டுக் குழு கூட்டத்தின் தீர்மானத்தை வலிமை பெறச் செய்ய இருப்பதாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன் எப்போதும் இல்லாத பொருளாதார, புவி அறிவியல், கால நிலை சவால்களுக்கு மத்தியில் G20 இந்தியத் தலைமைத்துவம் பெற்றிருக்கிறது. உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ள போது, சர்வதேச நிதி ஆணையம் மற்றும் இதர உலக நிறுவனங்கள், இந்தியா பிரகாசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு-தெற்கு பிரிவுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியா முக்கிய பங்காற்றும். ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் இந்தியா செயல்படும்.


G20 இந்தியத் தலைமைத்துவத்தின் கருப்பொருள் "வசுதைவ குடும்பகம் என்பது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" ஆகும். G20 இந்திய தலைமைத்துவம் பிரதமர் வழிகாட்டுதலின்படி, பணியாளர் மற்றும் பயிற்ச்சித்துறை ஊழலுக்கு எதிரான முதல் செயல்பாட்டுக் குழு கூட்டத்தை நடத்துகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News