கடந்த முறை போன்று ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி.!

நாட்டில் பரவும் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி பணிகள் பற்றி பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-04-18 03:47 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 1,341 கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் பரவும் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி பணிகள் பற்றி பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையானது சுமார் 9.30 மணி வரை நடைபெற்றது.


 



இதில் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாட்டில் ஏற்பட்டு வரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


 



இதனிடையே கூட்டம் முடிந்த பின்னர் பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "தற்போதைய கொரோனா தொற்று பரவலை கையாளுவதற்கான மதிப்பாய்வு செய்தது. மருந்துகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு நாம் செய்தது போன்று, கொரோனாவை இன்னும் அதிக வேகத்துடனும், ஒற்றுமையுடன் வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News