விநாயகர் சிலை கரைக்க அமைத்த குளத்தில் முதலை ! அதிர்ச்சியடைந்த பக்தர்கள்!
குஜராத் மாநிலம், வதோதரா நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு குளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் பக்தர்கள் சிலைகளை கரைத்து வந்தனர்.
குஜராத் மாநிலம், வதோதரா நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு குளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் பக்தர்கள் சிலைகளை கரைத்து வந்தனர்.
இந்நிலையில், குளத்தில் இருந்து 4 அடி நீள முதலை ஒன்று திடிரென்று வெளியே வந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்த வனத்துறையினர் முதலையை மீட்டு சென்றனர்.
இந்த முதலை எப்படி குளத்திற்கு வந்தது என்று வனத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, அருகாமையில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து தப்பி இந்த முதலை குளத்திற்கு வந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Maalaimalar