ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை எதிரொலி: 95 விரைவு ரயில்கள் அதிரடி ரத்து!
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தற்போது மெல்ல நகர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்து 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இதன் பின்னர் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலின் மத்திய பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர் 4ம் தேதி காலை தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் புயல் தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், ஒடிசா கடற்கரை மார்க்கமாக செல்லும் 95 எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருதியே ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: The Economic Times