மக்களுக்கு தீபாவளி பரிசு.. சொத்துவரி 50 சதவீதம் தள்ளுபடி செய்த அரசு.!

மக்களுக்கு தீபாவளி பரிசு.. சொத்துவரி 50 சதவீதம் தள்ளுபடி செய்த அரசு.!

Update: 2020-11-15 08:55 GMT

இந்தியா விடுதலை பெற்ற பின்பு இந்திய வருமானவரி சட்டம், 1961ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஏப்ரல் 1ம் தேதி 1962ம் ஆண்டு முதல் இந்திய வருமான வரிச்சட்டம் செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சொத்துவரி கட்ட முடியால் அவதிப்பெற்று வந்த தெலங்கானா மக்களுக்கு அம்மாநில அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளது

மாநிலத்தில் 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய சொத்து வரியில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் கே.டி.ராமாராவ், கொரோனாவைத் தொடர்ந்து மக்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை கருத்தில் கொண்டு தீபாவளி பரிசாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் 31 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடையும் என்றும் அரசுக்கு கூடுதலாக 6 ஆயிரத்து 326 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தார்.
 

Similar News