டெல்லியில் ஒரு வாரம் ஊரடங்கு: முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!

கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையை சமாளிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

Update: 2021-04-19 07:27 GMT

கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையை சமாளிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் ஏறுமுகமாகவே காணப்படுகிறது.




 


இந்நிலையில், பெருகி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஒரு வாரம் ஊரடங்கை பிறப்பித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநருடன் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து கொரோனா குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.




 


இதனையடுத்துதான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இன்று இரவு 10 மணிமுதல் 26ம் தேதி காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News