கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.50,000: டெல்லி முதலமைச்சர் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தலைநகர் டெல்லியை உலுக்கி எடுத்தது. கடந்த ஒரு சில மாதங்களாக மிக மோசமான நிலைக்கு டெல்லி தள்ளப்பட்டிருந்தது. அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிந்தது. அனைத்து இடுக்காட்டிலும் எரிந்த நிலையில் இருந்தது.

Update: 2021-05-18 12:14 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தலைநகர் டெல்லியை உலுக்கி எடுத்தது. கடந்த ஒரு சில மாதங்களாக மிக மோசமான நிலைக்கு டெல்லி தள்ளப்பட்டிருந்தது. அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிந்தது. அனைத்து இடுக்காட்டிலும் எரிந்த நிலையில் இருந்தது.

மற்ற மாநிலங்கள் அனைத்தும் டெல்லியின் நிலைமையை பார்த்து கண்ணீர் வடித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் படிப்படியாக தொற்றின் வேகம் பரவத் தொடங்கியது. ஆக்ஸிஜன் இல்லாமல் மருத்துவமனைகள் திண்டாடியது. இதனையடுத்து மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் லாரிகளில் எடுத்து வந்து சப்ளை செய்தது. இதனால் பல லட்சம் மக்கள் உயிர் பிழைத்தனர்.




 


இதனை தொடர்ந்து டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொற்றின் வேகம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் 20 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக தொற்று எண்ணிக்கை குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,500 ஆக பதிவாகியுள்ளது. அதே சமயம் உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்தது. மாநிலத்தில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பெரும்மூச்சு விட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை டெல்லியில் 21 ஆயித்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Similar News