டெல்லியில் 723 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு!
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவதியுற்று வந்த மக்களுக்கு அடுத்த பேராபத்தாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.;
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவதியுற்று வந்த மக்களுக்கு அடுத்த பேராபத்தாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இதனிடையே பருவமழையை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதுவரை 723 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்த மாதம் (அக்டோபரில்) 382 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு முதன்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக சுகாதார பணிகளை தீவிரப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது டெங்குவிற்கு ஒருவர் உயிரிழந்திருப்பது டெல்லி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy:Ndtv