ஜி20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இத்தாலி புறப்பட்டார். முதலில் அக்டோபர் 30 மற்றும் 31ம் தேதிகளில் ரோம் நகரில் நடைபெறும் 16வது ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் மாநாடு இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற இருக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைத்ததன் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதே போன்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகத்தலைவர்கள் மாநாடு நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இத்தாலி புறப்பட்டார். முதலில் அக்டோபர் 30 மற்றும் 31ம் தேதிகளில் ரோம் நகரில் நடைபெறும் 16வது ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பின்னர் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: ANI