ஏதோ பெரிய சதி நடக்கிறது - டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டு மொட்டை மாடியில் வெடிகுண்டு தயாரித்த வழக்கில் கைது !

Mujammil Alvi confessed that he had bought potassium and other materials from the local market and then planted the IEDs on Khan's terrace using a bamboo pole

Update: 2021-08-13 02:05 GMT

opindia

டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அன்சார் கான் உண்மையில் நிரபராதி என்பது தெரிய வந்துள்ளது. அவரது பக்கத்து வீட்டுக்காரர் குற்றம் செய்து அந்த பழி அன்சார் கான் மீது திட்டமிட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் டெல்லியில் 2020 பிப்ரவரி கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை தயாரித்ததாக அன்சார் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 31 ம் தேதி டெல்லி போலீஸ் சிறப்பு செல் குழு காஜியாபாத்தில் உள்ள லோனியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். பிப்ரவரி 2020 டெல்லி கலவரத்திற்கு வீட்டின் உரிமையாளர் அன்சார் கான் IEDகளை தயாரித்து வழங்கியதாக கூறப்பட்டது. 

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, டிஜிபி பிரமோத் குஷ்வாஹா வெளியிட்ட அறிவிப்பில், அன்சார் கான் நிரபராதி என்றும், தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர் மீது குற்றம் சாட்டிய அண்டை வீட்டுக்காரர் முஸம்மில் அல்வி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணைக்காக அல்வியை விசாரணை குழு அழைத்து வந்தது. சில தேதிகளில் அவர் எங்கே இருக்கிறார் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது ஆனால் முரண்பாடான பதில்களை அளித்துள்ளார். இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டார். 

குண்டுகளைத் தயாரித்து அன்சார் கான் வீட்டின் மொட்டை மாடியில் வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். அன்சார் கான் தனது குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானத்திற்கு பழிவாங்க இவ்வாறு செய்ததாக கூறினார். 

உள்ளூர் சந்தையில் இருந்து பொட்டாசியம் மற்றும் பிற பொருட்களை வாங்கியதாகவும், பின்னர் மூங்கில் கம்பை பயன்படுத்தி கானின் மொட்டை மாடியில் IEDகளை வைத்ததாகவும் தெரிவித்தார். 

உத்தரபிரதேச மாநிலம் லோனியில் இருந்து வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதால், கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு மற்றும் பிற ஆதாரங்களை சிறப்பு குழு உ.பி போலீசார் வசம் ஒப்படைத்தது.

Tags:    

Similar News