அமெரிக்காவில் தொடங்கிய தீபாவளி கொண்டாட்டம் - கமலா ஹாரிஸ் சிறப்பு நிகழ்ச்சி!

அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டம் தொடக்கம் கமலா ஹாரிஸ், ட்ரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள்.

Update: 2022-10-23 03:19 GMT

இந்தியாவின் புனித பண்டிகையான தீபாவளி இந்தியாவில் வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதைப்போல பல நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை விமர்சையாக கொண்டாட உள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டது. நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர் கவர்னர் மாளிகைகளில் தீபாவளி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங் வாஷிங்டனின் அரசு சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இதில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்திய அமெரிக்க பிரபலங்கள் தலைநகரில் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளை துணை ஜனாதிபதியும் இந்திய வம்சாவலியுமான கமலா ஹாரிஸ் தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார். இதற்காக பிரபல இந்திய அமெரிக்கர் இந்திய தூதரக அதிகாரிகள் என ஏராளமானோர்.


அவர் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். மேலும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பும் தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாடினார். இதில் பங்கேற்க சுமார் 200 அமெரிக்க இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல வெள்ளை மாளிகையில் வருகின்ற 24-ஆம் தேதி ஜனாதிபதி ஜோபாயுடன் தனது மனைவியுடன் தீபாவளியை கொண்டாட உள்ளார். இதில் ஏராளமான இந்தியர்களுக்கு அழைப்பு விடப்பட்ட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News