லோன் ஆப் மூலம் கடன் வாங்க வேண்டாம்.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.!

லோன் ஆப் மூலம் கடன் வாங்க வேண்டாம்.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.!

Update: 2020-12-23 16:39 GMT

தற்போது ஆன்லைனில் புதுமையான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு வழிகளில் அரசு எச்சரிக்கை செய்து வந்தாலும், இன்றைய இளைஞர்கள் பலர் தங்களின் பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தற்போது ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகிறது.

அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது. அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய வாலிபர் ஒருவர், கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஆன்லைன் ஆப் நிறுவனம் அவரின் நண்பர்கள் அனைவருக்கும் கடனை செலுத்தாதவர் என குறுஞ்செய்தி அனுப்பியதால் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பை இளைஞர்கள் பலர் கடைபிடிப்பதில்லை. என்னதான் படித்திருந்தாலும் இளைஞர்கள் மோசடியை எளிதில் நம்பிக்கொள்கின்றனர். இனிமேல் ஆவது உஷாராக இருந்தால் நல்லது.

Similar News