டி.ஆர்.டி.ஓ தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து.. இன்று முதல் கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட் விநியோகம்.!

டிடியோக்ஸி டிகுளுகோஸ் (2டிஜி) கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து (டிஆர்டிஓ) அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-17 04:28 GMT

டிடியோக்ஸி டிகுளுகோஸ் (2டிஜி) கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து (டிஆர்டிஓ) அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்து, தண்ணீரில் கலந்து கொரோனா பாதித்தவர்களுக்கு கொடுத்தால், வைரஸ் தொற்றில் இருந்து குணமடைவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பரிசோதனை முடிவில் நல்ல ரிசல்ட் வந்ததாகவும், இதனை நோயாளிகளுக்கு வழங்கியதில் முன்னேற்றம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2-டிஜி மருந்து இன்று வெளியாகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஆகியோர் கூட்டாக வெளியிடுகின்றனர். முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு ஆக்சிஜனிலிருந்து விடுபடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Similar News