வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: காங்கிரஸை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!
காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது, வாரிசு அரசியலால் நமது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து, மற்றும் வாரிசு அரசியல் காரணத்தினால் திறமைகள் புறக்கணிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

Congress' thinking has been hijacked by 'urban Naxals': PM Modi
— ANI Digital (@ani_digital) February 8, 2022
Read @ANI Story | https://t.co/cC7TFDlVIm#PMModi #Congress pic.twitter.com/6UlLbIVuRs
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது, காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் அவசரநிலை பிரகடனம், ஊழல் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், காஷ்மீரில் பண்டிட்கள் வெளியேற்றவை போன்ற செயல்கள் நடைபெற்றிருக்காது.
அது மட்டுமின்றி நமது நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பு, மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்திருக்கும் எனவும் பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக அவர் பேசும்போது: கடந்த 1975ல் ஜனநாயகத்தை கழுத்தை நெரித்தவர்கள்தான் காங்கிரஸ் கட்சியினர். மேலும் வாரிசு அரசிலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து மற்றும் வாரிசு அரசியல் புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் ஊழலே இருந்திருக்காது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: ANI