நிறுத்தப்படும் பாராளுமன்ற கேன்டீன் மானியம் -  வருடத்திற்கு எட்டு கோடி ரூபாய் மிச்சம்!

நிறுத்தப்படும் பாராளுமன்ற கேன்டீன் மானியம் -  வருடத்திற்கு எட்டு கோடி ரூபாய் மிச்சம்!

Update: 2021-01-20 07:00 GMT

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா செவ்வாய்க்கிழமையன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மற்றவர்களுக்கு பாராளுமன்றத்தில் வழங்கப்படும் உணவிற்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் இனிமேல் கேன்டீனில் உணவு விலை உயரும் என்றும் தெரிவித்தார். 

எவ்வளவு தூரம் இதனால் பணத்தை மிச்சம் பிடிக்கலாம் என்று தெளிவாக தெரிவிக்கவில்லை என்றாலும் மக்களவை செயலகம் இதன் மூலம் ஆண்டுக்கு எட்டு கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாராளுமன்ற கேன்டீனில் பாராளுமன்ற எம்பிக்கள் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள், உட்பட அனைவருக்கும் மானிய விலையில் உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Prices with subsidy    Source/DNA

ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிர்லா, வடக்கு ரயில்வேக்கு பதிலாக இனிமேல் பாராளுமன்ற கேன்டீன் ITDC யால் நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

அமர்வு தொடங்குவதற்கு முன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் covid-19 பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார். மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, மக்களவை இரண்டாம்பாதியில் மாலை 4 முதல் 8 மணி வரையும் செயல்படும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு கேள்வி நேரம் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார். MP க்களின் குடியிருப்புக்கு அருகிலேயே பரிசோதனைக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற வளாகத்தில் covid-19 சோதனைகள் ஜனவரி 27, 28ஆம் தேதி நடைபெறும். மேலும் எம்பிக்களின் குடும்பங்கள் மற்றும் பணியாளர்களுக்கும் இந்த சோதனைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

மாநில மற்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ள தடுப்பூசி கொள்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.

Similar News