இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.!
இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணியளவில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தமிழக அரசின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய ஆட்சி அமைப்பதற்காக தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இதே போன்று கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைகிறது. இதனால் அம்மாநிலத்திற்கான தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், மற்றும் திருத்தம் செய்யும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. இதனிடையே இறுதி வாக்காளர் பட்டியலை சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனிடையே இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் சென்னையில் இரண்டு நாட்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடையே ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தமிழக தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு சென்றார்.
இந்நிலையில், தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது. இதனை தலைமை தேர்தல் ஆணையர் டெல்லியில் அறிவிக்க உள்ளார். இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி அமைக்கும் வியூகங்களை அமைத்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் அனைவருமே தேர்தல் என்னும் திருவிழாவை சந்திக்க உள்ளனர் குறிப்பிடத்தக்கது.