மிகப்பெரிய ஜாக்பாட்.. 5 ஆண்டுகளில் ரஷ்யா, சீனாவை மிஞ்சும் இந்தியர்களின் வருமானம்! ஆய்வில் தகவல்!
கொரோனா தொற்றுக்கு பின்னர் உலகளவில் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டது. இதனை சரிகட்டுவதற்காக ஒவ்வொரு நாடும் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஊழியர்களின் ஊதியம் உயரும் என்று ஆய்வு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டில் 9.9 சதவிகித ஊதிய உயர்வை பெறுவார்கள் என நாடு முழுவதும் உள்ள தொழில்துறை அமைப்புகள் கூறியதாக உலகின் முன்னணி தொழில்முறை சேவை நிறுவனமான ஆன் தெரிவித்துள்ளது. வருகின்ற 2022ம் ஆண்டுக்குள், பிரிக்ஸ் நாடுகளிடையே அதிகபட்ச ஊதிய உயர்வை பெறுகின்ற நாடாக இந்தியா மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவில் உள் ஊழியர்கள் 6 சதவிகித ஊதிய உயர்வை பெறுவார்கள் என்றும், ரஷ்யாவில் இது 6.1 சதவிகிதமாக இருக்கும் என அந்த கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 40 தொழில்துறைகளில் 1500 நிறுவனங்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் இணையதள வர்த்தகம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி அறிக்கின்ற நிதி நிறுவனங்கள், உயர் தொழில்நுட்பம் அல்லது தகவல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அதிகபட்ச ஊதியத்தை பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
Source: Dinamani
Image Courtesy: Business Standard