மெல்ல குறையும் கொரோனா தாக்கம்: இந்தியாவில் பொருளாதாரம் மீண்டெழுவதை காட்டும் இ.பி.எப்.ஓ தரவு - நெருக்கடியிலும் பதிவான சாதனை அளவு !
12.83 lakh net payroll additions during the month of June, 2021. With respect to payroll data, the impact of second wave of COVID-19 pandemic waned during June 2021
நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின், தற்காலிக தரவு விவரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வெளியிட்டது. இதில் கடந்த ஜூன் மாதம், 12.83 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பெரும் பிரச்சினையாக வெடித்த கொரோனா வைரஸ் மொத்த நாட்டையே திக்குமுக்காட வைத்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின.
ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியானது. வளர்ச்சி குறைந்தது மட்டுமல்லாமல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை இந்தியா எதிர்நோக்கியது.
சூழலில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டு பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக இறங்கியது. இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில் நடவடிக்கைகளும் சூடுபிடிக்கத் தொடங்கின. இதனால் மீண்டும் இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தாலும் அதை எதிர்த்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படாமல் வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணிக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 12.83 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், கொரோனா தொற்றின் 2வது தாக்கம் கடந்த ஜூன் மாதம் குறைந்தது. இது தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், நிகர சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 5.09 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் இணைந்த சந்தாதாரர்கள் 12.83 லட்சம் பேரில், 8.11 லட்சம் பேர், இபிஎப்-ன் சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள்.