ரயில் நிலையத்துக்குள் மசூதி- பத்திரிக்கையாளர் பதிவிட்ட புகைப்படத்தால் பரபரப்பு.!

ரயில் நிலையத்துக்குள் மசூதி- பத்திரிக்கையாளர் பதிவிட்ட புகைப்படத்தால் பரபரப்பு.!

Update: 2021-01-07 06:30 GMT

டெல்லி சந்தினி சவுக் பகுதியில் வளர்ச்சிப் பணிகளின் ஒரு பகுதியாக, சாலை அமைக்க பிரசித்தி பெற்ற அனுமார் கோவில் இடையூறாக இருப்பதாக பிரச்சினை எழுந்ததைத் தொடர்ந்து கோவிலை இடிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த உத்தரவை டெல்லி அரசு நிறைவேற்றியுள்ளது.

 

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இருந்ததால் நீதிமன்றம் 100 ஆண்டுகளுக்கும் மேல் கோவிலை இடிக்க உத்தரவிட்டது இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லி ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் கரீப் ஷா மசூதி என்ற பெயரில் ஒரு கட்டிடம் அமைந்துள்ள தகவல் தெரிய வந்ததால் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

 

கோவா கிரானிக்கிள்ஸ் என்ற பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றி வரும் சஷாங்க் சேகர் ஜா டெல்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அமைந்துள்ள இந்த மசூதியை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், பொது இடத்தில் அமைந்துள்ள இந்த மத வழிபாட்டுத் தலத்தையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.

 

பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருக்கும் மத வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட வேண்டும் என்று கூறியே டெல்லி நீதிமன்றம் சாந்தினி சவுக் அனுமார் கோவிலை இடிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதை சுட்டிக் காட்டி கரீப் ஷா மசூதியும் இடிக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

 

Kalinga Rights Forum என்ற தன்னார்வ அமைப்பு இது குறித்து இந்திய ரயில்வே, அமைச்சர் பியூஷ் கோயல், டெல்லி ரயில்வே உள்ளிட்டவர்களுக்கு புகார் அனுப்பியுள்ளது. இது போன்று பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. பல ரயில் நிலையங்களில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்து வருவதாகவும் அவற்றை சரியான முறையில் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

எனினும் வடக்கு ரயில்வே இந்த மசூதி 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் ரயில் நிலையம் கட்ப்படுவதற்கு முன்பிருந்தே அங்கு இருப்பதாகவும் ட்விட்டர் கணக்கில் இருந்து பதிவிட்டது. இது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்படி என்றால் சாந்தினி சவுக் அனுமார் கோவில் மட்டும் சாலை அமைத்து பின் அங்கே முளைத்ததா? அதை மட்டும் ஏன் இடிக்க வேண்டும்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 

இந்த மசூதி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் வில்லியம் டேரிம்பிள் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்து இந்து விரோத கருத்துக்களைக் கூறி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் பேசக் கூடியவர்.

 

எனவே இவர் எழுதியதை அரசு வலைதளத்தில் ஆதாரமாகக் காட்டியது மட்டுமல்லாமல், அதைக் காரணம் காட்டி ரயில் நிலையத்தில் அமைந்திருக்கும் மசூதியை இடிக்க முடியாது என்பது போல் கூறுவது எந்த வைகையில் நியாயம் என்று பலரும் கொந்தளிக்கின்றனர். இதே போன்று அலகாபாத், கமலாபூர், லக்னோ சார்பாக் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் இவ்வாறு மசூதிகள் கட்டப்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Similar News