சுயேச்சை நாடான இந்தியாவால் எதையும் செய்ய முடியும்: வெளியுறவுத்துறை அமைச்சர் பெருமிதம்!
தேசத்தின் பாதுகாப்பிற்காக தன்னால் எதையும் செய்ய முடியும் என்பதை இந்தியா உலகத்திற்கு நிரூபித்து இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் தற்பொழுது சர்வதேச பல்கலைக்கழகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் அந்த நிகழ்ச்சியில் பேசும் பொழுது, ஒவ்வொரு நாட்டிற்கும் சவால்கள் உள்ளன. ஆனால் தேச பாதுகாப்பு போல் கூர்மையான சவால்கள் வேறு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக நம்முடைய நாட்டிற்கு கடந்த சில ஆண்டுகளாக மேற்கு எல்லைகளில் சோதனைகள் அதிகமாக கொடுத்தார்கள். இப்போது நிலைமை சற்று மாற்றம் வந்து இருக்கிறது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பல்வேறு விஷயங்கள் எல்லைகளில் நடந்து இருக்கிறது.
குறிப்பாக வடக்கு எல்லைகளில் நமக்கு சோதனை செய்ய வேண்டிய பல்வேறு செயல்களை அண்டைய நாடுகள் செய்து வருகிறது. இந்த சோதனைகளை இந்தியா எப்படி கடந்து வந்துள்ளது என்பதுதான் நம்முடைய திறமை தற்பொழுது வெளிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தேச பாதுகாப்பை முன்னிறுத்த எல்லைகளுக்கு எந்த ஒரு எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு நாடாக இருக்கிறது இந்தியாவிற்கு உள்ள கௌரவம்.
இது ஒரு சகிப்புத்தன்மையும் , பொறுமையும் கொண்ட நாடு மற்றவர்களுடன் சண்டை போடும் நாடு அல்ல. குறிப்பாக நம் சுயேச்சையாக நாடாக திகழ்கிறோம். நமது குரல்களுக்காக மட்டுமல்லாமல் தெற்குலக நாடுகளுக்கு சேர்த்து குரல் கொடுக்கிறோம். G-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா தற்பொழுது எந்த ஒரு அமைப்பிலும் இடம்பெறாத நாடுகளின் நல்லனுக்காக பாடுபட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Daily Thanthi News