பயணிகள் விமானத்தில் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துச்செல்வதற்கு மத்திய அரசு அனுமதி.!

பயணிகள் விமானத்தில் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துச்செல்வதற்கு மத்திய அரசு அனுமதி.!

Update: 2021-01-07 15:18 GMT

கொரோனா தடுப்பூசிகளை நாடு முழுவதும் விரைவாக கொண்டு சேர்க்க மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளை வகுத்து வருகிறது. அதில் விமானப்போக்குவரத்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக செல்வதற்கு உதவுகிறது. இதனால் மத்திய அரசு விமானப்போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சில நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை கண்டுப்பிடித்து அதில் 95 சதவிகிதம் அளவிற்கு குணப்படுத்துவதையும் உறுதி செய்துள்ளது.இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்த தடுப்பு மருந்துகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது. கப்பல்கள் மூலமாக எடுத்து வந்தால் நாட்கள் விரயம் ஆகும் என தெரியவந்ததால், அனைத்து தடுப்பு மருந்துகளையும் விமானங்கள் மூலமாக அனுப்ப அந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலும் தடுப்பு மருந்துகளை வேகமாக எடுத்து செல்வதற்கு மத்திய அரசு விமானங்களை அணுகியுள்ளது. இதற்காக விமானப்போக்குவரத்திடம் ஆலோசனையும் நடத்தியுள்ளது.

இந்நிலையில், பயணிகள் விமானத்திலும் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துச்செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏதுவாக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News