ராணுவத்திற்கு முதுகெலும்பாக இது திகழ்கிறது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது எதை?

பாதுகாப்புத் துறைக்கான வலுவான நிதி அமைப்பு முறை அவசியம்.

Update: 2023-04-13 01:33 GMT

பாதுகாப்புத் துறைக்கான வலுவான நிதி அமைப்பு முறை வலிமையான ராணுவத்திற்கு முதுகெலும்பாக உள்ளது. பாதுகாப்புத்துறைக்கு அதிகபட்ச பணம் செலவிடப்படுவது அவசியம் என்று புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார். பாதுகாப்புத் துறைக்கான வலுவான நிதி அமைப்பு முறை வலிமையான ராணுவத்திற்கு முதுகெலும்பாக உள்ளது என்றும் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்ச பணம் செலவிடப்படுவது அவசியம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மூன்று நாள் மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், முறையான நிதி ஆதாரங்களை பயன்படுத்துதல், சிறந்த பொருளாதார பகுப்பாய்வு, உள்தணிக்கை, நிதி செலுத்துதல், கணக்குப்பதிவியல் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


பாதுகாப்புத் தளவாட கொள்முதலில் வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் போட்டி ஏல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாள் மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News