G20 அமைப்பு தலைமை பொறுப்பேற்ற இந்தியா - கொல்கத்தாவில் துவங்கிய முதல் கூட்டம்!

G20 மாநாட்டு முதல் கூட்டம் கொல்கத்தாவில் துவங்கியது.

Update: 2023-01-10 01:01 GMT

G20 மாநாட்டின் முதல் கூட்டம்(GPFI) குறித்த பணிக்குழுவின் முதல் கூட்டம் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. அனைத்து உறுப்பு நாடுகள், அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் உலக வங்கி, IMF மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அழைக்கப்பட்ட அமைப்புகளும் இதில் பங்கேற்க இருக்கிறது. முக்கிய அமர்வில் நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மை பற்றி விவாதிக்கப் படுகிறது. நிதி அமைச்சகத்தின் நிதி விவகாரத் துறையின் ஆலோசகர் சஞ்சல் சர்க்கார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், 'நிதிச் சேர்க்கைக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைத் திறப்பது' என்ற விவாதத்துடன் கூட்டம் தொடங்கியது. 


இரு குழு விவாதங்கள் நடைபெறும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற 12 நிதி வல்லுநர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். இது தவிர, புதுமையான நிதி தயாரிப்புகள் குறித்த கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நாளில் முதன்மைக் கூட்டம் நடைபெறும். இதுதவிர மாணவர்களிடையே நிதி அறிவை அதிகரிக்க சிறப்பு கருத்தரங்கு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர்.


டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் நிதி பரிவர்த்தனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், இதன் மூலம் அதிக மக்களை இணைப்பது, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான பணம் செலுத்தும் கட்டணத்தை குறைப்பது, நடுத்தர மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கு நிதியுதவியை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சர்க்கார் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News