அசாம்: வெள்ளம் காரணமாக 24 அரிய வகை விலங்கினங்கள் உயிரிழப்பு !

அசாமில் தற்பொழுது கன மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய காசிரங்கா தேசிய பூங்காவில் வாழ்ந்து 24 அரியவகை விலங்குகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Update: 2021-09-07 14:05 GMT

அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருகில் சிக்கி காசிரங்கா தேசிய பூங்காவில் காண்டாமிருகம் உள்ளிட்ட 24 அரிய வகை விலங்குகள் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக ஏராளமான சேதங்கள் அடைந்துள்ளன.  அசாமில் பெய்த தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டு 700 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 16 மாவட்டங்கள் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. 


மேலும் இதில் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட மக்‍கள் இருப்பிடங்களை இழந்து தவிக்கின்றனர். இவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். 20 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளை நிலங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்து உள்ளார்கள்.  


கவுகாத்தி நகரை சுற்றியுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அப்பகுதி மற்றும் வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டன. இந்த நிலையில் இன்றைக்கு காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவின் சுமார் 70 விழுக்காடு நிலப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலைமையில் காசிரங்கா தேசிய பூங்காவில், காண்டாமிருகம் உள்ளிட்ட 24 அரிய வகை விலங்குகள் உயிரிழந்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.   

Input:Scroll

Image courtesy:Scroll 


Tags:    

Similar News