உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு !

Breakimg News.

Update: 2021-08-31 06:39 GMT

உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமனம் செய்யாமல் இருந்தது. இதனை தொடர்ந்து இந்த மாதத்தில் அடுத்தடுத்து மூத்த நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இதனால் 26ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24ஆக குறைந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமனம் செய்ய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை முழுமையாக ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 9 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி 9 நீதிபதிகளும் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Source, Image Courtesy: Dinakaran

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=701678

Tags:    

Similar News