2024 ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபைகள் தேர்தல் - முன்னாள் கமிஷனர் பரபரப்பு தகவல்!
2024 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டசபைகளுக்கும் தேர்தல் என்று முன்னாள் தலைமை கமிஷனர் பரபரப்பு பேட்டி.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலைமையை ஏற்படுத்த பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காக அவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற சட்டசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். தேர்தல் கமிஷன் சட்ட கமிஷன், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் நாடாளுமன்ற சட்டசபை தேர்தலுக்காக ஒரே நேரத்தில் நடத்துவதை ஆதரிக்கின்றன. மத்தியில் பா.ஜ.க இதனை தீவிரமாக அதை ஆதரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதில் எச்சரிக்கையாக அணுகுமுறையை கொண்டுள்ளது. அதே நேரத்தில் சில அரசியல் கட்சிகளும் ஆய்வாளர்களும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற சட்டசபை தேர்தல் என்ற விஷயத்தில் தீவிரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ராவத் வெளியிட்டுள்ள வெளிப்படையான கருத்துக்களில் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் நடத்தும் யோசனை ஒன்றும் புதிது அல்ல. இது 1967 ஆம் ஆண்டு நேரத்தில் தான் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல் நடந்தது. 1968, 1969 ஆண்டுகளில் முன்கூட்டியே சட்டசபைகளை கலைத்த பொழுதுதான் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறை இருந்து தடம் புரளும் நிலை உருவானது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஒட்டிய ஒரு விரிவான திட்டத்தை தேர்தல் கமிஷன் மத்திய அரசிடம் ஏற்கனவே அளித்துள்ளது. 1970 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போல இப்பொழுதும் நாடாளுமன்ற, சட்டசபைகள் தேர்தலை நடத்துவது சாத்தியம்தான். ஆனால் அதை அனைத்து கட்சி தலைவர்களிடமிருந்து ஆளும் கட்சி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடம் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தி அரசியல் சாசனத்தில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும. 2019 பொதுத் தேர்தலில் சட்டசபை தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக சட்ட கமிஷன் ஒரு விரைவு அறிக்கையை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி நிதி அயோக் தனது விவாத அறிக்கையையும் விரிவான திட்டத்தை தெரிவித்தது. 2019ல் நடக்க வாய்ப்பு இருந்தது. இப்பொழுது 2024 ஆம் ஆண்டு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சட்ட கமிஷன் நிதி ஆயோக் பரிந்துரை செய்தபடி ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல்களையும் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Thanthi News