2 மாதங்களுக்கு உணவு தானியங்கள் இலவசம்: பிரதமர் மோடி உத்தரவு.!

80 கோடி மக்கள் பயனடையும் வகையில் 26,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 2 மாதங்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படும்.

Update: 2021-04-23 10:33 GMT

கொரோனா வைரஸ் தொற்று பேரிடரை பொதுமக்கள் சந்தித்து வரும் நிலையில், மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.




 


இந்தியாவில் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக கொரோனா தொற்றின் 2ம் அலை மிக தீவிரமாக வீசி வருகிறது. இதனால் நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அன்றாடம் வேலைக்கு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வந்தாலும், தற்போது வீட்டிலேயே அனைவரும் இருக்கும் சூழ்நிலையில் உணவு தேவைகள் அதிகரித்துள்ளது.




 


இந்நிலையில், 80 கோடி மக்கள் பயனடையும் வகையில் 26,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 2 மாதங்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் வகையில் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Similar News