G20 மாநாட்டில் பங்கேற்க வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் இத்தாலி பயணம்!

Update: 2021-06-25 12:28 GMT

இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சராக இருப்பவர் ஜெயசங்கர். G20 அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சர் இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு இன்று செல்கிறார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்சி  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.


அமைச்சரின் பயணம் குறித்து அரிந்தம் பக்சி கூறும்பொழுது "கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் இன்று கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். வரும் ஜூன் 25 (இன்று) மற்றும் 26 ஆகிய நாட்களில் மேற்கொள்ளும் இந்த பயணத்தில் கிரீஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சருடன் ஜெயசங்கர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்னர் அவர் இத்தாலி நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார்.


இதில், ரோம் நகரில் நடைபெறும் G20 அமைச்சர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். G20 அமைச்சர்கள் உச்சி மாநாடு 2021 ஆம் ஆண்டு வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன." இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News