கங்கா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் ரூ.46,605 கோடியில் இணைப்பு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022, 23ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

Update: 2022-02-01 06:26 GMT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2022, 23ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் நதி நீர் இணைப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயத்திற்கு நீர் ஆதாரம் மிக முக்கியமானதாகும். தற்போது நதிநீர் இணைப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நீர்பாசன இணைப்பு திட்டம் ரூ.46,605 கோடியில் செயல்படுத்தப்படும். கங்கை - கோதாவரி, கிருஷ்ணா காவிரி நதிகளை இணைக்கப்படும். இதற்கான இறுதி திட்டம் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி கிடைத்த உடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News