விருந்தினர்கள் இறைவனுக்கு சமம்... இதுதான் நமது மரபு... பிரதமரின் மெய் சிலிர்க்கும் பேச்சு!
புத்தரின் உணர்வுகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை சிந்தனைகளை மேலும் மேன்மையடையச் செய்கிறது.
புதுதில்லியில் நடைபெற்ற உலக புத்தர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்தப் பிரதமர், புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்சியில் பேசிய பிரதமர், இந்த உலக புத்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவிற்கு உலகின் பல திசைகளில் இருந்து வருகை தந்திருக்கும் அனைவரையும் நான் வரவேற்கிறேன். விருந்தினர்கள், இறைவனுக்கு சமம் என்பதை அடிக்கோடிட்டு காட்டியப் பிரதமர், இந்தப் புத்த பூமியின் பாரம்பரியமும் இதுதான்.
புத்தரின் உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கி வாழ்ந்த பலர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இருப்பது, இங்கு புத்தர் நம்மிடையே இருப்பதாக உணர்கிறேன். புத்தர் தனிநபர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டவர். அது ஒரு ஞானமாகும். எல்லையற்ற ஞானமாகும். அவர் மேம்பட்ட சிந்தனை வடிவானவர். எல்லையில்லா வகையில், எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வே புத்தராவார். புத்தரின் ஞானம் அழிவே இல்லாதது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பலதரப்பட்ட மக்கள், புத்தரின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமையப்பெற்று, ஒரு இழையில் மனித நேயம் இணைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த சிந்தனையாற்றலின் பலம், உலகளவில் புத்தரின் கொள்கைகளை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் தீர்மானமானது உலக மேம்பாட்டிற்காக செயல்படுகிறது. இந்த உலக புத்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவின் மூலம், அனைத்து தேசங்களுக்கும் ஒரு சிறந்த தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதில் நம்பிக்கைக் கொள்கிறேன். இந்த முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த மத்திய கலாச்சாரம் அமைச்சகம் மற்றும் சர்வதேச புத்த கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
Input & Image courtesy: News