இந்து பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் செயலி, பேஸ்புக் பக்கங்கள்: மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை!

குறிப்பிட்ட அந்த சேனல் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கையாக மாநில காவல்துறையுடன் மத்திய அரசு ஒருங்கிணைத்து செயல்படுகிறது எனக் கூறினார்.

Update: 2022-01-06 07:34 GMT

இந்து பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் செயலி மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரித்துள்ளார். ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் டெலிகிராம் உள்ளிட்டவைகள் இந்துப் பெண்களை டார்கெட் செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.

மேலும், குறிப்பிட்ட அந்த சேனல் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கையாக மாநில காவல்துறையுடன் மத்திய அரசு ஒருங்கிணைத்து செயல்படுகிறது எனக் கூறினார்.

முன்னதாக 'புல்லி பாய்' என்ற செயலி மூலம் 100 முஸ்லீம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக டெல்லி மற்றும் மும்பையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை உருவாக்கியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:The Economic Times

Tags:    

Similar News