ஒரு கட்சி சார் ஊடகங்கள் விமர்சிக்கும் "பிஎம் கேர்ஸ்" - விமர்சனங்களை புறம்தள்ளி குழந்தைகளுக்கான திட்டத்தையும் வெளியிட்ட மத்திய அரசு..!

Government Issues Guidelines For PM Cares For Children Scheme

Update: 2021-10-09 03:49 GMT

பெருந்தொற்று கால அவசர சூழ்நிலையில் தொடங்கப்பட்ட "பிஎம் கேர்ஸ்" திட்டத்தை, சமூக ஊடக தகவலை கொண்டு ஒரு சில கட்சி சார்பு ஊடகங்கள் விமர்சித்து வரும் நிலையில், "பிஎம் கேர்ஸ்" திட்டத்தின் கீழ் அடுத்தடுத்து முன்னெடுப்புகளை கொண்டு வந்து அசர வைத்துள்ளது மத்திய அரசு.

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்திற்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு மே 29 அன்று அறிவித்தார். இத்தகைய குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டது.

சுகாதாரக்காப்பீட்டின் மூலம் நல்வாழ்வையும், கல்வியின் மூலம் அதிகாரமளித்தலையும் 23 வயது அடையும்போது நிதியுதவி செய்வதன் மூலம் தற்சார்புக்கு அவர்களைத் தயார் செய்வதையும் இந்தத் திட்டம் கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கு நிதி வசதியை உறுதிசெய்ய 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித்தொகையையும் 23 வயதை அடையும்போது மொத்தமாக ரூ.10 லட்சம் ரொக்கத் தொகையையும் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் வழங்குகிறது.

அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்தக் குழந்தைகளுக்கு இரண்டு ஜோடி இலவச சீருடைகள் மற்றும் பாடபுத்தகங்களை வழங்கவேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக்கட்டணத்திலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கவேண்டும். சில சூழ்நிலைகளில் மேலே குறிப்பிட்ட சலுகைகளைப் பெறமுடியாவிட்டால் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படும். சீருடை, பாட நூல்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றிற்கான செலவும் வழங்கப்படும்.

11-18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மேற்குறிப்பிட்ட வகையான பள்ளிகளில் இடம் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதிசெய்யவேண்டும். அனைத்துக் குழந்தைகளும் ரூ.5 லட்சம் சுகாதாரக் காப்பீட்டுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்படுவார்கள். பயனாளிக்கு வழங்கப்படும் மொத்தமான ரொக்கத்தொகை அவர்களால் தொடங்கப்பட்ட அஞ்சலகக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளியாக அடையாளம் காணப்படும் குழந்தைகள் 18 வயது அடையும்போது ரூ.10 லட்சம் இந்த கணக்கில் சேர்க்கப்படும். 18 வயதிலிருந்து இவர்கள் மாதந்தோறும் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளலாம். 23 வயதை அடையும்போது ரூ.10 லட்சத்தை அவர்கள் மொத்தமாக பெறுவார்கள்.




 










Tags:    

Similar News