தொழில்கள் மற்றும் பெரிய கட்டிடங்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எரிசக்தி இனி கட்டாயமாகலாம்!

Govt May Soon Mandate Minimum Share Of Renewable Energy In Power Consumption Of Industries And Large Buildings

Update: 2021-11-01 08:39 GMT

எரிசக்தி பாதுகாப்பு சட்டம், 2001-ன் கீழ் சில திருத்தங்களை முன்மொழிவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு வழிகளை கண்டறிந்துள்ளது. தொழில், கட்டிடங்கள், போக்குவரத்து போன்ற பயன்பாட்டுத் துறைகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான தேவையை அதிகரிப்பதே இதன் நோக்கமாக இருக்கும்.

பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்த பிறகு, மின் அமைச்சகம் திருத்தங்களைத் தயாரித்துள்ளது. தொழில்துறை அலகுகள் அல்லது எந்தவொரு நிறுவனமும் ஒட்டுமொத்த நுகர்வில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் குறைந்தபட்ச பங்கை வரையறுப்பது இந்த முன்மொழிவில் உள்ளடக்கியுள்ளது. கார்பன் சேமிப்பு சான்றிதழின் மூலம் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க திட்டங்கள் வகுக்கப்பட உள்ளது. 

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் குறைந்தபட்ச நேரடி நுகர்வு, கிரிட் மூலம் பயன்படுத்தப்படும். இது புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான ஆற்றல் நுகர்வு மற்றும் வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவும் என்று மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. 2005 ஆம் ஆண்டை விட 2030 ஆம் ஆண்டில் 33 முதல் 35 சதவிகிதம் வரை உமிழ்வை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்களில் இருந்து 40 சதவீதத்திற்கும் அதிகமான ஒட்டுமொத்த மின்சக்தி நிறுவப்பட்ட திறனை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளதாக மின்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

எரிசக்தி திறன் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 550 மில்லியன் டன் CO2 ஐக் குறைக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது.


Tags:    

Similar News