நவம்பர் GST வசூல் 1.46 லட்சம் கோடி: 11% இந்த ஆண்டு அதிகரிப்பு!
நவம்பர் மாத GST வசூல் 1.46 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.
நவம்பரில் சரக்கு மற்றும் சேவை வரி சுமார் 1.46 கோடி வசூலாகியதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும் பொழுது தற்பொழுது 11% அதிக ஜி.எஸ்.டி வருவாய் கிடைத்திருக்கிறது. நாட்டின் ஜி.எஸ்.டி வசூல் தொடர்ந்து ஒன்பதாவது மாதம் 1.40 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில், நவம்பரில் மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 867 கோடியாகும். இதில் மத்திய ஜி.எஸ்.டி 25 ஆயிரத்து 681 கோடி, மாநில ஜி.எஸ்.டி 32867 கோடி, ஒருங்கிணைத்த ஜி.எஸ்.டி 77,103 கோடி, சரக்கு விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 38,635 கோடி, செஸ் வரி 10,433 கோடி, இறக்குமதி மூலம் வசூலான 8 2017 கோடி இதில் அடங்கும். மேலும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 526 கோடி ஜி.எஸ்.டி வருவாய் கிடைத்து இருந்த நிலையில் தற்போது 11% அதிக ஜி.எஸ்.டி இந்த ஆண்டு இந்த மாதத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நவம்பரில் சரக்கு இறக்குமதி மூலம் கிடைத்து ஜி.எஸ்.டி வருவாய் 20% உள்நாட்டு பரிவர்த்தனன் மூலம் கிடைத்த வருவாய் எட்டு சதவீதமும் அதிகரித்து இருக்கிறது என்று நிதி அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருக்கிறது. முன்பாக கடந்த ஏப்ரலில் இதுவரை இல்லாத சாதனை அளவான 1.68 லட்சம் கோடி வசூல் ஆனது. அதற்கு அடுத்தபடியாக அக்பரின் 1.5 2 லட்சம் கோடி GST வசூலானது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News