ஜிஎஸ்டி வரலாற்றிலேயே இதுவே இரண்டாவது மிகப்பெரிய தொகை: சாதனை அளவை தொட்ட அக்டோபர் மாத வரிவசூல்!

ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்

Update: 2021-11-01 11:46 GMT

அக்டோபர் மாதத்தில் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து ரூ.1,30,௧௨௭ கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.23,861 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.30,421 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.67,360 கோடி மற்றும் மேல் வரி (செஸ்) ரூ.8,484 கோடி ஆகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.27,310 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.22,394 கோடியும், மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கு பின், மத்திய மற்றும் மாநில அர

மொத்த வருவாய், அக்டோபர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.51,171 கோடி மற்றும் மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.52,815 கோடி. கடந்த அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டு அக்டோபர் ஜிஎஸ்டி வருவாயைவிட 24 சதவீதம் அதிகம். 2019-20 நிதியாண்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாயைவிட 36 சதவீதம் அதிகம்.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் வசூலான இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும். இது பொருளாதார மீட்பைக் காட்டுகிறது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு அக்டோபரைவிட தற்போது 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொரோனா 3வது அலை குறித்த ஆபத்து இருந்தாலும், வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு ஜிஎஸ்டி வசூல்ரூ.1லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை காட்டுகிறது. மேலும் வரவிருக்கும் மாதங்களில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதிகள் ஆகிய இரண்டிலும் ஜிஎஸ்டி வசூலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய உற்பத்திகளில் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளைக் காட்டியிருப்பதால், நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருப்பதை காட்டுகிறது.

ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, குஜராத், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகியவை ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 25 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்த சில முக்கிய மாநிலங்கள் ஆகும். மொத்த ஜிஎஸ்டி வருவாய் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் வருவாயை உள்ளடக்கியது.






Tags:    

Similar News