பரபரப்பு! மீண்டும் ராமர் கோவில் நிதி பேரணி மீது நடந்த தாக்குதலில் ஒரு இந்து மரணம்!

பரபரப்பு! மீண்டும் ராமர் கோவில் நிதி பேரணி மீது நடந்த தாக்குதலில் ஒரு இந்து மரணம்!

Update: 2021-01-25 15:44 GMT

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்காக  நிதி திரட்ட குஜராத் காந்திதாம் பகுதியில் கிடானி கிராமத்தில் விஷ்வ இந்து பரிஷத்(VHP) பேரணி நடத்திய போது அந்த பகுதியில் உள்ள மசூதியைக் கடந்து சென்ற போது கற்களால் பேரணி நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

பேரணி நடத்தியவர்கள் மீது 200 முஸ்லீம் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது மற்றும் ஒரு இந்து நபரைக் கத்தியால் குத்தியுள்ளது. குத்துப்பட்ட நபர் ஜார்கண்டில் இருந்து வந்த அர்ஜுன் சவாயோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ரிக்க்ஷாவில் சென்று கொண்டிருந்த போது தாக்கப்பட்டுள்ளார். இந்த வன்முறையில் காவல்துறை உட்படப் பலர் காயமடைந்துள்ளனர். 

இந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது. "அந்த பேரணிக்குப் பின்பு குத்தப்பட்ட நபரின் உடல் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டருக்கு பின்பு மீட்கப்பட்டது," என்று SP பட்டில் தெரிவித்தார். மேலும் இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு அந்த கிராமத்தில் 144 சட்டம் விதிக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கலவரம்,பொதுச் சொத்துக்களை சேதமடையச் செய்தது, ஒரு சமூகத்தின் முழக்கங்கள் மூலம் மற்றொரு சமூகத்தைக் கோபமடையச் செய்ததது போன்றவற்றிற்காக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மற்றொரு FIR யில் இக்பால் சவடா, கசம் கால், இப்ராஹிம், ஹுசைன் சவடா, மற்றும் அடையாளம் தெரியாத 200 நபர்கள் மீது பேரணியை நிறுத்தித் தாக்குதல் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலுக்குப் பிறகு 9 VHP உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டம் நடத்திய RSS மற்றும் VHP உறுப்பினர் 10 பெரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News